/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமியிடம் அத்துமீறல் முதியவர் கைது
/
சிறுமியிடம் அத்துமீறல் முதியவர் கைது
ADDED : ஏப் 23, 2025 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடியைச் சேர்ந்த, 38 வயது பெண்ணுக்கு, 13 வயது மகள் உள்ளார். சிறுமி, அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியின் வீடு எதிரே குமார், 53 என்பவர் வசித்து வருகிறார். இவர், சிறுமியிடம் தவறான செய்கை காட்டி, தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி ஆவடி அனைத்து மகளிர் போலீசார், குமாரை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.