ADDED : ஜூன் 25, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாங்காடு:மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 50. இவர், நேற்று மாலை சைக்கிளில் போரூர்- - குன்றத்துார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
மவுலிவாக்கம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி சைக்கிளில் மோதியது. இதில், கீழே விழுந்த அய்யனார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் குமார், 50, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.