/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
/
குளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
ADDED : நவ 27, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி அடுத்த பெரியகடம்பூர் கீழ்காலனி அருகே, ஊராட்சிக்கு சொந்தமான நல்லாங்குளம் உள்ளது.
இக்குளத்தில் நேற்று, முதியவர் ஒருவர் சடலமாக மிதப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, திருத்தணி போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து, அரைமணி நேரம் போராடி முதியவரின் உடலை மீட்டனர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், 65, என்றும், மூன்று நாட்களுக்கு முன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரிய வந்தது.
முதியவர் குளத்தில் குளிக்க சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

