/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் முதியவர் வெட்டிக்கொலை
/
திருத்தணியில் முதியவர் வெட்டிக்கொலை
ADDED : ஜூன் 02, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி திருத்தணி அடுத்த அகூர் காலனியைச் சேர்ந்தவர் ரவி, 60; தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று காலை வழக்கம் போல் செக்யூரிட்டி வேலைக்கு சென்று விட்டு, இரவு 8:30 மணிக்கு வீடு திரும்பினார்.
இரவு 9:00 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஐந்து பேர், ரவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார், சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரவிக்கும், மர்மநபர்களுக்கும் மாடு அறுப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.