/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணல் லாரி மோதி முதியவர் பலி உறவினர்கள் மறியல் போராட்டம்
/
மணல் லாரி மோதி முதியவர் பலி உறவினர்கள் மறியல் போராட்டம்
மணல் லாரி மோதி முதியவர் பலி உறவினர்கள் மறியல் போராட்டம்
மணல் லாரி மோதி முதியவர் பலி உறவினர்கள் மறியல் போராட்டம்
ADDED : மார் 05, 2024 07:48 PM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாய் ஒட்டி சவுடு மண் குவிக்கப்பட்டு இருந்தது. தனிநபர் ஒருவர் இந்த மணலை விற்பனை செய்யும் உரிமம் பெற்று விற்று வருகிறார். இங்கிருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட லாரிகள், கிருஷ்ணா நதிநீர் கால்வாய் மேல் சென்று வருகிறது.
அசுர வேகத்தில் மணல் லாரிகள் செல்வதாக மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
மேலும், ஊத்துக்கோட்டை -- ஜனப்பன்சத்திரம் இடையே சாலை மோசமான நிலையில் உள்ளதால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன.
கடந்த, 2ம் தேதி காலை மணல் ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் சென்ற லாரி ஒன்று, தாராட்சி கிராமத்தில் பைக்கில் சென்று கொண்டு இருந்த குணசேகரன், 65, என்பவர் மீது மோதிய விபத்தில் பலியானார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பினார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் இதுவரை கைது செய்யப்படவில்லை. குவாரி நடத்துபவர்கள், உயிரிழப்பு ஏற்படுத்திய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.
ஆனால் இரு தினங்களாக வழக்கம் போல் குவாரியில் இருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றிச் செல்கின்றன.
இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த குணசேகரன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொம்பரம்பேடு கிராமத்தில் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வாயிலாக மணல் ஏற்றி வந்த லாரிகளை நேற்று முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

