/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடுப்பு எரிக்கும் போது தீக்காயமடைந்த மூதாட்டி பலி
/
அடுப்பு எரிக்கும் போது தீக்காயமடைந்த மூதாட்டி பலி
ADDED : டிச 15, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், புதுப்பனப்பாக்கம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம்மா, 85.; நேற்று முன்தினம் மாலை வீட்டின் வெளியே அடுப்பில் சுடுதண்ணீர் வைத்தார்.
அப்போது அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ, மூதாட்டி அணிந்திருந்த உடையில் பற்றியது. தீ உடல் முழுதும் பரவியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் மூதாட்டி சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.