/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மரத்தில் கார் மோதி மூதாட்டி பலி
/
மரத்தில் கார் மோதி மூதாட்டி பலி
ADDED : செப் 30, 2025 11:56 PM
ஆர்.கே.பேட்டை;சாலையோரம் இருந்த புளியமரத்தில் கார் மோதி, 68 வயது மூதாட்டி பலியானார்; இருவர் காயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் விஜயராகவன், 47. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் வேலுாரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார்.
நேற்று காலை அவரது தாய் ராஜேஸ்வரி, 68, மனைவி பிரியா, 44, ஆகியோருடன் வேலுாரில் இருந்து காரில் சோளிங்கருக்கு திரும்பினார்.
திருவள்ளூர் மாவட்டம் பத்மாபுரம் அருகே வந்த போது, கார் சாலையோர புளியமரத்தில் மோதியது. விபத்தில் காரில் இருந்த மூவரும் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து ராஜேஸ்வரியை மேல் சிகிச்சைக்காக வேலுார் சி.எம்.சி., மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்தார்.
விபத்து குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.