/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனை நிழற்குடை முன் மின்கம்பத்தால் பயணியருக்கு இடையூறு
/
அரசு மருத்துவமனை நிழற்குடை முன் மின்கம்பத்தால் பயணியருக்கு இடையூறு
அரசு மருத்துவமனை நிழற்குடை முன் மின்கம்பத்தால் பயணியருக்கு இடையூறு
அரசு மருத்துவமனை நிழற்குடை முன் மின்கம்பத்தால் பயணியருக்கு இடையூறு
ADDED : மே 18, 2025 03:24 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை ஒட்டி, புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு முன், மின்கம்பம் இடையூறாக உள்ளதால் பயணியர் சிரமப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஜே.என்.சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இம்மருத்துவமனை முன், பேருந்து நிறுத்தும் இடத்தில், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. அங்கு, பயணியர் வசதிக்காக இருக்கை வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பயணியர் நிழற்குடை நடுவே, இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனால், பேருந்தில் பயணம் செய்வோர் மின்கம்பத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பேருந்து வருவதற்கு முன், அதற்கு முன் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதால், அவற்றை தவிர்க்க விரும்பும் பயணியருக்கும், அந்த மின்கம்பம் இடையூறை ஏற்படுத்துகிறது.
மேலும், பேருந்துகளில் ஏறும் அவசரத்தில் பயணியர் மின்கம்பத்தில் மோதி காயமடையும் அபாயமும் உள்ளது. எனவே, பேருந்து நிறுத்தம் முன், பயணியருக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.