/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் இணைப்பு பெயர் மாற்றுவதில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்
/
மின் இணைப்பு பெயர் மாற்றுவதில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்
மின் இணைப்பு பெயர் மாற்றுவதில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்
மின் இணைப்பு பெயர் மாற்றுவதில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்
ADDED : நவ 17, 2025 12:28 AM
திருத்தணி: ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும், ஐந்து கோவில்களின் மின் இணைப்புக்கான பெயரை மாற்றாமல், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில், திருவேட்டீஸ்வரர், தண்டுமாரியம்மன், காளியம்மன், வரசித்தி விநாயகர் மற்றும் அந்தேரியம்மன் கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் 'தர்மகர்த்தா' பெயரில் மின் இணைப்பு பெறப்பட்டது. இந்த மின் கட்டணத்தை தர்மகர்த்தா செலுத்தி வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த ஐந்து கோவில்களும், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. 'கோவில்களின் மின் இணைப்பு கட்டணத்தை, ஹிந்து அறநிலையத் துறை செலுத்தும்' என, தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து, இக்கோவில்களின் மின் இணைப்பை, ஹிந்து அறநிலையத் துறையின் பெயரில் மாற்றம் செய்தால், மாதந்தோறும் மின் கட்டணம் ஹிந்து அறநிலையத் துறை ஆய்வாளர் மூலம் கட்டப்படும்.
ஐந்து கோவில்களின் மின் இணைப்பு பெயர், ஹிந்து அறநிலையத் துறையின் ஆய்வாளர் பெயரில் மாற்றித்தர வேண்டும் என, அனைத்து ஆவணங்களுடன், திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளரிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டது.
மேலும், திருவள்ளூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளரிடமும், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
மூன்று மாதங்களாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, கோவில்களின் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்துதர வேண்டும் என, அகூர் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

