/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
2 ஆண்டாக வீணாகும் மின்கம்பங்கள் மின்வாரிய அதிகாரிகள் பாராமுகம்
/
2 ஆண்டாக வீணாகும் மின்கம்பங்கள் மின்வாரிய அதிகாரிகள் பாராமுகம்
2 ஆண்டாக வீணாகும் மின்கம்பங்கள் மின்வாரிய அதிகாரிகள் பாராமுகம்
2 ஆண்டாக வீணாகும் மின்கம்பங்கள் மின்வாரிய அதிகாரிகள் பாராமுகம்
ADDED : செப் 23, 2025 12:11 AM

பொன்னேரி:இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய புயல் மழையின் போது கொண்டு வரப்பட்ட மின்கம்பங்கள், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், பயன்பாடின்றி மண்ணில் புதைந்து வருவதுடன், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட புயல் மழையின்போது, பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பங்கள் உடைந்து சேதமாகின. இதற்காக, வெளிமாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு, சேதமானவை மாற்றப்பட்டன.
புதிய மின்கம்பங்களில் சில, தேவையான இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக, பொன்னேரி புதிய தேரடி சாலையோரத்தில் போடப்பட்டன. இரண்டு ஆண்டுகளாகியும், அவை எவ்வித பயன்பாடும் இன்றி, அதே இடத்தில் மண்ணில் புதைந்து வீணாகி வருகின்றன.
மேலும், இச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கும், இவை இடையூறாக உள்ளன. வாகனங்கள் அவற்றின் மீது பயணிப்பதால், சேதமடையும் நிலை உள்ளது.
கிராமப்புற பகுதிகளில், மின்கம்பங்கள் சேதமடைந்து, புதிதாக மாற்றப்படாமல் உள்ளது. ஆனால், இந்த மின்கம்பங்கள் எவ்வித பயன்பாடும் இன்றி வீணாகி வருவது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.