/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உடைந்த கம்பத்திற்கு 'முட்டு' மின்வாரியம் 'புதுடெக்னிக்'
/
உடைந்த கம்பத்திற்கு 'முட்டு' மின்வாரியம் 'புதுடெக்னிக்'
உடைந்த கம்பத்திற்கு 'முட்டு' மின்வாரியம் 'புதுடெக்னிக்'
உடைந்த கம்பத்திற்கு 'முட்டு' மின்வாரியம் 'புதுடெக்னிக்'
ADDED : ஜன 28, 2026 07:41 AM

திருவாலங்காடு: சக்கரமல்லுார் அரசு பள்ளி சாலையில் சேதமடைந்த மின்கம்பம் விழாமல் இருக்க, மரக்கொம்பு வைத்து மின்வாரிய துறையினர் முட்டு கொடுத்துள்ளனர். இது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாலங்காடு ஊராட்சி சக்கரமநல்லூர் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி சாலை உள்ளது. இங்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு எதிரே உள்ள மின்கம்பம், சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்து உள்ளது.
சேதமடைந்த மின்கம்பம் சாலையில் விழுந்தால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், திருவாலங்காடு மின்வாரிய துறையினர், கம்பத்திற்கு மரக்கொம்பால் முட்டு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், திருவாலங்காடு மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பள்ளி மாணவர்கள் செல்லும் சாலையில், அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

