/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் வரும் 12ல் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்
/
பொன்னேரியில் வரும் 12ல் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்
பொன்னேரியில் வரும் 12ல் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்
பொன்னேரியில் வரும் 12ல் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்
ADDED : நவ 08, 2024 09:00 PM
பொன்னேரி:பொன்னேரி மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த, மின்நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம் இம்மாதம், 12ம் தேதி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
காலை, 10:30 மணிமுதல், மதியம் வரை 1:00மணிவரை நடைபெற உள்ள கூட்டத்தில், வடக்கு மின் திட்ட மேற்பார்வை பொறியாளர், பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும், உதவிபொறியாளர்கள் பங்கேற்று மின்நுகர்வோரிடம் குறைகளை கேட்க உள்ளனர்.
இதில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர், மின்வினியோகத்தில் ஏற்படும் பிரச்னைகள், மின்தட்டுப்பாடு, குறைந்த மின்அழுத்தம், புதிய மின்இணைப்பு உள்ளிட்ட மின்துறை சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என, பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.