ADDED : நவ 10, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வேண்பாக்கத்தில், 33/ 11 கிலோ வோல்ட் திறன் உடைய துணைமின் நிலையம் உள்ளது.
இந்த வளாகத்தில் உள்ள பொன்னேரி செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

