/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை அள்ளும் ஆட்டோக்கள் மீது வேன் மோதல்: இரு பெண்கள் காயம்
/
குப்பை அள்ளும் ஆட்டோக்கள் மீது வேன் மோதல்: இரு பெண்கள் காயம்
குப்பை அள்ளும் ஆட்டோக்கள் மீது வேன் மோதல்: இரு பெண்கள் காயம்
குப்பை அள்ளும் ஆட்டோக்கள் மீது வேன் மோதல்: இரு பெண்கள் காயம்
ADDED : நவ 10, 2025 11:05 PM

திருத்தணி: பேட்டரி ஆட்டோக்கள் மூலம் குப்பை சேகரிக்கும் போது, அதிவேகமாக வந்த வேன் மோதியதில், இரு பெண் துப்புரவு பணியாளர்கள் காயமடைந்தனர்.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளிலும் பேட்டரி, டீசல் ஆட்டோ மற்றும் 'டாடா ஏஸ்' வேன் ஆகிய வாகனங்கள் மூலம் துப்புரவு பணியாளர்கள் குப்பை சேகரித்து வருகின்றனர். நேற்று, இரு பேட்டரி ஆட்டோக்கள் மூலம், திருத்தணி - சோளிங்கர் சாலையில் உள்ள கே.கே.நகர் பகுதியில், குப்பை சேகரிக்கும் பெண் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த இரு ஆட்டோக்களும் சாலையோரம் நின்றிருந்த போது, சோளிங்கர் பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த வேன், ஆட்டோக்கள் மீது மோதியது.
இதில், ஆட்டோவில் இருந்த கீதா, 40, சுமதி, 45, ஆகிய இருவரும் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.