/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய சப் - ஜூனியர் கால்பந்து இறுதி போட்டியில் தமிழக அணி
/
தேசிய சப் - ஜூனியர் கால்பந்து இறுதி போட்டியில் தமிழக அணி
தேசிய சப் - ஜூனியர் கால்பந்து இறுதி போட்டியில் தமிழக அணி
தேசிய சப் - ஜூனியர் கால்பந்து இறுதி போட்டியில் தமிழக அணி
ADDED : நவ 10, 2025 11:04 PM

சென்னை: தேசிய சப் - ஜூனியர் கால்பந்து போட்டியில், திரிபுராவை வீழ்த்தி தமிழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அகில இந்திய கால்பந்து சங்கம் சார்பில், மாணவர்களுக்கான தேசிய சப் - ஜூனியர் கால்பந்து போட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூரில் நடக்கிறது.
இதில் தமிழகம், புதுச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநில அணிகள் நான்கு பிரிவாக போட்டியிடுகின்றன. இதன் 'டி' பிரிவில் தமிழக அணி இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே, மத்திய பிரதேசம் மற்றும் புதுச்சேரி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அசத்திய தமிழக அணி, அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று மாலை அரையிறுதி போட்டி நடந்தது.
இதில் தமிழக அணி, திரிபுரா அணியை எதிர்த்து களம் இறங்கியது. துவக்கம் முதலே தமிழக அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
முடிவில் 4 - 0 என்ற கோல் கணக்கில் எதிரணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
தமிழக அணிக்காக சவுவிக் ஹால்டர், இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

