/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பக்தர்கள் தரிசன அனுபவம் தெரிவிக்க திருத்தணி கோவிலில் மின்னணு இயந்திரம்

ADDED : டிச 15, 2024 12:13 AM

திருத்தணி:சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் எளிதாக புகார் மற்றும் ஆலோசனைகள் தெரிவிப்பதற்கு மின்னணு தொடுதிரை இயந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த இயந்திரத்தை நேற்று காலை, ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
இதையடுத்து, திருத்தணி முருகன் கோவிலில், மின்னணு தொடுத்திரை ஆலோசனை இயந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இதை திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி, நேற்று இயந்திரத்தை திறந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விட்டார்.
இந்த இயந்திரத்தில், பக்தர்கள் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இந்த இயந்திரம் காலை, 10:00 மணிக்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட நிலையில், பகல், 11:00 மணிக்கு மின்னணு இயந்திரம் பழுதடைந்தது.
இதனால், தொடுதிரையில் புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து திருத்தணி கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது:
காலையில் தான் மின்னணு தொடுதிரை ஆலோசனை பெட்டி திறக்கப்பட்டது. இன்னும் இந்த இயந்திரத்திற்கு சரியான முறையில் இணைய வசதி வழங்காததால் காலதாமதம் ஆகிறது.
விரைவில் தொடுத்திரை இயந்திரம் பழுது பார்த்து பயன்பாட்டிற்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.