/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் ஆக்கிரமிப்பு: வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
/
திருத்தணியில் ஆக்கிரமிப்பு: வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
திருத்தணியில் ஆக்கிரமிப்பு: வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
திருத்தணியில் ஆக்கிரமிப்பு: வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
ADDED : டிச 08, 2025 06:26 AM

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் ஓடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை, போலீஸ் பாதுகாப்பு மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் நீர்வளத்துறையினர் அதிரடியாக நேற்று அகற்றினர்.
திருத்தணி நகராட்சி, சாய்பாபா நகர் இரண்டாவது தெருவில், 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த தெருவில் நீர்வளத் துறைக்கு சொந்தமான ஓடைக்கால்வாய், 40 அடி அகலத்திற்கும், 650 மீட்டர் நீளமும் இருந்தது. இந்த கால்வாய் வழியாக முருகன் மலைக்கோவிலில் இருந்து மழைநீர் திருத்தணி ஏரிக்கு செல்கிறது.
இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன், சில வீட்டு உரிமையாளர்கள் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளனர்.
இதுதவிர, 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஓடைக்கால்வாய் மீது வீடுகள் கட்டி ஆக்கிரமித்திருந்தனர். இதனால், மலையில் இருந்து வெளியேறும் மழைநீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஓடைக்கால்வாயை ஆக்கிரமித்த கட்டடங்களை அகற்றி தருமாறு வருவாய் துறையினர் மற்றும் கலெக்டருக்கு திருத்தணி நீர்வளத்துறையினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, வருவாய் துறையினர் ஓடைக்கால்வாயை சர்வே செய்து, ஆக்கிரமிப்பு கட்டடங்கள் குறித்து அடையாளம் காண்பித்தனர்.
திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில், வருவாய் துறை, நீர்வளத்துறை, தீயணைப்பு துறை, மின்வாரியம் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, 150க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

