/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனை மரம் வெட்டிய சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி
/
பனை மரம் வெட்டிய சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி
பனை மரம் வெட்டிய சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி
பனை மரம் வெட்டிய சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி
ADDED : செப் 24, 2024 06:50 AM
சோழவரம்: சோழவரம் அடுத்த பூதுார் கிராமத்தில், கரை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள அரசு நிலத்தில் இருந்த, 70க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தனிநபர் வசதிக்காக. கடந்த, ஜூலை, 6ம் தேதி ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் வெட்டி சாய்க்கப்பட்டன.
இச்சம்பவம் கிராமவாசிகள் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால், பொன்னேரி வருவாய்த்துறையினரிடமும், சோழவரம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.
புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லாத நிலையில், இம்மாதம், 2ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மககள் குறைதீர்க்கும் நாளில் புகார் மனு அளித்தனர்.
மனு அளித்து, 22 நாட்கள் ஆன நிலையில், பனை மரங்களை வெட்டியவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கை இல்லாததால், சுற்று சூழல் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.