/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நல்லாட்டூரில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
/
நல்லாட்டூரில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 26, 2024 06:46 AM

திருத்தணி : திருத்தணி தாலுகா, நல்லாட்டூர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழா, பாதிரியார் பிரிட்டன் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், 150 கிலோ கேக் தயாரிக்கப்பட்டு, கேக் வெட்டி, கிறிஸ்துவர்கள் நல்லாட்டூர் கிராமம் மற்றும் மிட்டகண்டிகை ஆகிய பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, கேக் வழங்கினர்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று, காலை 8:00 மணி வரை சர்ச்சில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி வழிபட்டனர்.
இதில், நல்லாட்டூர் ஊராட்சி தலைவர் கலையரசி உட்பட கிராமத்தினர் பலர் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் விழா ஒட்டி சி.எஸ்.ஐ., சர்ச் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

