ADDED : ஏப் 11, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமையில் அலுவலக ஊழியர்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சமத்துவ உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக, கலெக்டர் பிரதாப், அம்பேத்கரின் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார்.