/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கலைக் கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
/
திருத்தணி கலைக் கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
திருத்தணி கலைக் கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
திருத்தணி கலைக் கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 11, 2025 02:07 AM

திருத்தணி:திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரி வளாகத்தில், பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று காலை, சமத்துவ பொங்கல் விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் தலைமை வகித்து, பொங்கல் விழாவை துவங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, கல்லுாரி வளாகத்தில் செங்கரும்பு மற்றும் புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பெங்கிவரும் போது, மாணவர்கள், பேராசிரியர்கள், 'பொங்கலோ, பொங்கல்' என, கோஷம் எழுப்பியும், சூரிய பகவானுக்கு படைத்தும் வழிபட்டனர்.
முன்னதாக கல்லுாரி நுழைவு வாயிலில், வண்ண, வண்ண கோலங்கள் போட்டு மாணவியர் அசத்தினர். தெடார்ந்து மாணவர்கள் இடையே பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
இதே போல, திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது.
இதில், கல்லுாரி தாளாளர் எஸ்.பாலாஜி பங்கேற்று, பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லுாரி முதல்வர் வேதநாயகி தலைமையில், புதுப்பானையில் பொங்கல் வைத்து, சூர்யபகவானுக்கு படைத்து வழிபட்டனர். பின், மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.