/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி
ADDED : ஜூலை 02, 2025 09:09 PM
திருவள்ளூர்:'தமிழ்நாடு' தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ - மாணவியருக்கு, நாளை கட்டுரை, பேச்சு போட்டி நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும், ஜூலை 18ம் தேதி 'தமிழ்நாடு' நாளாக கொண்டாடப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு போட்டி, நாளை திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி., இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ - மாணவியருக்கு முறையே, 10,000, 7,000 மற்றும் 5,000 ரூபாய் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டிகளுக்கு, கல்வி மாவட்டத்திற்கு ஒரு போட்டிக்கு 25 பேர் வீதம், இரண்டு கல்வி மாவட்டத்திற்கும், 50 பேர் தேர்வு செய்து, போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.