/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் விரிவாக்க பணி சாலையோர மரங்கள் அகற்றம்
/
திருத்தணியில் விரிவாக்க பணி சாலையோர மரங்கள் அகற்றம்
திருத்தணியில் விரிவாக்க பணி சாலையோர மரங்கள் அகற்றம்
திருத்தணியில் விரிவாக்க பணி சாலையோர மரங்கள் அகற்றம்
ADDED : நவ 10, 2025 01:54 AM

திருத்தணி: மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணி நகராட்சியில், அக்கையா நாயுடு சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துக்களும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, திருத்தணி மாநில நெடுஞ்சாலை துறையினர், அக்கையா நாயுடு சாலையில் விரிவாக்கம் மற்றும் புதிதாக 1.60 கோடி ரூபாயில் ரவுண்டானா அமைக்கும் பணி, ஓரிரு நாட்களுக்கு முன் துவங்கியது.
இதனால், அக்கையா நாயுடு சாலையில் உள்ள மரங்களை, நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் வெட்டி அகற்றி வருகின்றனர். மேலும், போக்குவரத்து இடையூறு இல்லாமல், முதலில் மரக்கிளை வெட்டி அகற்றிய பின், மரத்தின் அடிப்பாகத்தை வெட்டி அகற்றி வருகின்றனர்.
இதனால், அக்கையா நாயுடு சாலையில், பல ஆண்டுகளாக இருந்த ஏழு மரங்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

