/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி சீரழியும் சிவன் கோவில் குளம்
/
பராமரிப்பின்றி சீரழியும் சிவன் கோவில் குளம்
ADDED : நவ 10, 2025 01:54 AM

ஆர்.கே.பேட்டை: சிவன் கோவில் குளம் பராமரிப்பின்றி சீரழிந்து வருவதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குளத்தை துார்வாரி, படித்துறை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி கிராமத்தில் ஊராட்சி அலுவலகத்தின் பழைய கட்டட வளாகத்தை ஒட்டி சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலை ஒட்டி குளமும் உள்ளது.
இந்த குளத்தில் இருந்து தான் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தியம் பெருமான் சிலைகள், குளக்கரையில் எளிமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு நீண்ட காலமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த சிவன் கோவிலுக்கு வரும் கான்கிரீட் பாதையும், குளக்கரையும் பராமரிப்பின்றி சீரழிந்து உள்ளது.
குளத்தில் யாரும் இறங்க முடியாத அளவிற்கு செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, குளத்தை துார்வாரி சீரமைக்கவும், குளத்திற்கு படித்துறை கட்டவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

