தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சேதமடைந்து வரும் மேம்பாலம் நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு

 சேதமடைந்து வரும் மேம்பாலம் நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு

 சேதமடைந்து வரும் மேம்பாலம் நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு


ADDED : மார் 01, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னேரி: பொன்னேரி - குண்ணம்மஞ்சேரி இடையேயான மேம்பாலம் சேதமடைந்துள்ள நிலையில், நெடுஞ்சாலை துறையினர், தற்காலிகமாக 'பேட்ச்ஒர்க்' செய்யாமல், நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொன்னேரி - குண்ணம்மஞ்சேரி இடையே உள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே, 2020ம் ஆண்டு, 12.30 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், மேம்பாலத்தின் கான்கிரீட் கட்டுமானங்கள் சேதமடைந்து வருகிறது.

ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. மழைக்காலங்களில் மழைநீர் சென்று, இரும்பு கம்பிகள் துருப்பிடிக்கின்றன.

சேதமடைந்த பகுதிகளில் உள்ள இரும்பு கம்பிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.

குண்ணம்மஞ்சேரி, பெரியகாவணம், ஏலியம்பேடு, இந்திரா நகர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களின், நீண்டகால கோரிக்கையின் பயனாக அமைந்த மேம்பாலம், தற்போது சேதமடைந்து இருப்பது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பள்ளங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில், நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் கொட்டி 'பேட்ச்ஒர்க்' பணிகளை செய்து ஒப்பேற்றுகின்றனர்.

தொடர் வாகன போக்குரவத்து இருப்பதால், 'பேட்ச்ஒர்க்' பணி பயன் தருவதில்லை. அடுத்த இரண்டே நாட்களில் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது.

பாலத்தின் உறுதித்தன்மை பாதித்து வருவதால், நெடுஞ்சாலை துறையினர், ஒப்பேற்றும் நடவடிக்கையை கைவிட்டு, சீரமைப்பு பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும். மேலும், பாலத்தின் ஓரங்களில் குவிந்திருக்கும் மண்ணையும் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us