/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி, கல்லுாரி நாட்களில் கூடுதல் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
/
பள்ளி, கல்லுாரி நாட்களில் கூடுதல் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
பள்ளி, கல்லுாரி நாட்களில் கூடுதல் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
பள்ளி, கல்லுாரி நாட்களில் கூடுதல் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 28, 2025 06:14 AM
திருத்தணி: பள்ளி மற்றும் கல்லுாரி வேலை நாட்களில், கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தணி நகராட்சியில் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. மேலும், மூன்று தனியார் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதுதவிர, திருத்தணி அடுத்த மேதினாபுரம் பகுதியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, கே.ஜி.கண்டிகை, நல்லாட்டூர், குருவராஜப்பேட்டை உட்பட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து, தினமும் 9,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த கிராமங்களுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால், மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அரசு பேருந்துகள் காலை நேரத்தில் குறைவாக இயக்கப்படுவதால், மாணவ - மாணவியர் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால், அவ்வப்போது உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், மேற்கண்ட வழித்தடங்களுக்கு பள்ளி, கல்லுாரி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியரிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

