/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர தடுப்புகள் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
சாலையோர தடுப்புகள் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 12, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில், சாலையோரம் உள்ள 500 மீட்டர் நீள இரும்பு தடுப்புகள் சேதமடைந்து உள்ளன.
இந்த வழியாக சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை, இரும்பு தடுப்புகள் பதம்பார்க்கும் வகையில் ஆபத்தாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, உடனடியாக சாலையோர இரும்பு தடுப்புகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.