/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமதியற்ற வீட்டு மனை வரன்முறை காலம் நீட்டிப்பு
/
அனுமதியற்ற வீட்டு மனை வரன்முறை காலம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 05, 2025 08:27 PM
திருவள்ளூர்:அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த, 2026 ஜூன் வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சட்டசபை மானிய கோரிக்கையின் போது, 'அனுமதியற்ற மனை பிரிவுகளில், 2016க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற வீட்டு மனைகள் வரன்முறைப்படுத்தப்படும்,' என, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, அனுமதியற்ற வீட்டு மனையை வரன்முறைப்படுத்த, 2026 ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், www.tcponline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மலையிட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களையும், நவ., 30ம் தேதி வரை, அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.