/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை விபத்து தொழிலாளி தீக்காயம்
/
தொழிற்சாலை விபத்து தொழிலாளி தீக்காயம்
ADDED : ஜன 17, 2025 10:01 PM
கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில், ‛வைபவ் மெர்கண்டைல்' என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் கிரேன் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம், பணியில் இருந்த போது, ஹைட்ராலிக் குழாய் ஒன்று துண்டித்து, அதில் இருந்த சூடான எண்ணெய், அவர் மீது சிதறியது. பலத்த தீக்காயம் அடைந்த சதீஷ்குமார், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், ஒப்பந்ததாரர் மற்றும் தொழிற்சாலை மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.