/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை விபத்து தொழிலாளி உயிரிழப்பு
/
தொழிற்சாலை விபத்து தொழிலாளி உயிரிழப்பு
ADDED : நவ 22, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த சத்தீஸ்கர் மாநில தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுல்தான்கான், 27. இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை வளாகத்தில் வசித்தபடி, கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை, 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

