/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலி மருத்துவர் பள்ளிப்பட்டில் கைது
/
போலி மருத்துவர் பள்ளிப்பட்டில் கைது
ADDED : செப் 27, 2025 01:58 AM

பள்ளிப்பட்டு:பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு, அலோபதி மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு நகரில், 'வேலு மருத்துவமனை' என்ற பெயரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில், முறையாக மருத்துவ பட்டம் பெறாத நபர், அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக, திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறையினருக்கு புகார் வந்தது.
நேற்று காலை, திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் அம்பிகா மேற்பார்வையில், அத்திமாஞ்சேரிபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன் தலைமையிலான சுகாதார அதிகாரிகள், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பெருமாநல்லுாரைச் சேர்ந்த வடிவேலு, 53, என்பவர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு, அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில், வட்டார மருத்துவர் தனஞ்செழியன் அளித்த புகாரின்படி, வடிவேலுவை போலீசார் கைது செய்தனர்.