/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி
/
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி
ADDED : செப் 27, 2025 01:56 AM

பள்ளிப்பட்டு:சவுடு மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், நிழற்குடை மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன.
பள்ளிப்பட்டு அருகே தச்சூர் -- சித்துார் ஆறுவழி சாலை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக, அருகிலுள்ள மண் குவாரிகளில் இருந்து இரவு, பகலாக டிப்பர் லாரிகளில் மண் ஏற்றி வரப்படுகிறது.
நேற்று அதிகாலை 4:00 மணியளவில் நெடியம் வழியாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சாலையோரம் இருந்த இரண்டு மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
மேலும், பயணியர் நிழற்குடையும் சேதமடைந்தது. அதிகாலை என்பதால், பயணியர் நிழற்குடையில் யாரும் இல்லை. இதனால், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. லாரி ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பினார்.
எனவே, கம்பங்களுக்கான இழப்பீடு தொகையை, மின்வாரியத்திற்கு செலுத்த லாரி உரிமையாளர் முன்வந்துள்ளதால், சமரசம் ஏற்பட்டுள்ளது.