ADDED : பிப் 19, 2024 06:25 AM

காசிமேடு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்பிடிக்கச் சென்ற 80க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், நேற்று கரை திரும்பின.
இதில், பர்லா, வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட மீன் வகைகள் அதிகமாகக் காண முடிந்தது. மீன் விலையும் மலிவாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகவில்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ''ஜனவரி மாதம் துவங்கி மீன்பிடித் தடைக்காலமான ஏப்ரல் வரையில், மீன்வரத்து குறைவாகவே இருக்கும். இந்த நேரங்களில் மீன்விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க படகில் சென்று வரும் செலவிற்குக் கூட, மீன்கள் விற்பனையாகவில்லை. இதனால், நஷ்டம் ஏற்படுகிறது,'' என கூறினர்.
மீன் விலை நிலவரம்
வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 700 1,000
பாறை 400 -500
கடமா 200 300
வவ்வால் 500 1,200
சங்கரா 200 500
பர்லா 200 300
இறால் 200 350
நண்டு 200 400

