/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஒரத்தூரில் விவசாய கைது
/
தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஒரத்தூரில் விவசாய கைது
தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஒரத்தூரில் விவசாய கைது
தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஒரத்தூரில் விவசாய கைது
ADDED : மே 03, 2025 02:21 AM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனி, 42, சத்தியமூர்த்தி 43. விவசாயிகளான இருவருக்கும், அதே கிராமத்தில் அருகருகே விவசாய நிலங்கள் உள்ளன. இவர்களுக்குள் ஏரி நீரை பாய்ச்சுவதில் தகராறு இருந்து வந்தது.
கடந்த வாரம் இருவருடைய விவசாய நிலத்திலும் நெல் விதைப்பு பணி நடந்தது. அப்போது சத்தியமூர்த்தி, 'தன்னுடைய நிலத்தில் தான் முதலில் நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் தான் உன் நிலத்திற்கு பாய்ச்ச வேண்டும்' எனக் கூறி, பழனியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், மண்வெட்டியை எடுத்து வெட்டி விடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் பழனி புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.