ADDED : செப் 25, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி, செப். 26–
கவரைப்பேட்டை அருகே, டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், அடியில் சிக்கிய விவசாயி உயிரிழந்தார்.
கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் கிராமத்தில் வசித்தவர் ரவிச்சந்திரன், 46. விவசாயி. நேற்று முன்தினம், அவருக்கு சொந்தான விவசாய நிலத்தில், டிராக்டரை ஓட்டி உழுது கொண்டிருந்தார்.
அப்போது, சேற்றில் சிக்கிய டிராக்டரை மீட்கும் போது, டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டருக்கு அடியில் சிக்கிய ரவிச்சந்திரன், மீள முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
