/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் தனி அடையாள எண் வரும் 8க்குள் பெற அறிவுறுத்தல்
/
விவசாயிகள் தனி அடையாள எண் வரும் 8க்குள் பெற அறிவுறுத்தல்
விவசாயிகள் தனி அடையாள எண் வரும் 8க்குள் பெற அறிவுறுத்தல்
விவசாயிகள் தனி அடையாள எண் வரும் 8க்குள் பெற அறிவுறுத்தல்
ADDED : மார் 31, 2025 02:32 AM
திருவள்ளூர், மார்ச் 31-
விவசாயிகள் தனித்துவ அடையாள எண், வரும் 8ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு, வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கலாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் தரவுகளை சேகரித்து தனித்துவ அடையாள எண் பதிவு செய்யும் பணி, 'இ - -சேவை' மையத்தில் நடைபெற்று வருகிறது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் ஆகிய துறைகளைச் சார்ந்த கள அலுவலர்கள், அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, அனைத்து இ - சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. விவசாயிகள் தொடர்ந்து பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெற விரைவாக வேளாண் உழவர் நலத்துறை அலுவலர் மற்றும் இ - -சேவை மையங்களை அணுகி, தனி அடையாள எண் கட்டாயம் பெற வேண்டும்.
வரும் 8ம் தேதிக்குள் தனி அடையாள எண்ணை பெற கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 23,925 பி.எம் கிசான் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள், தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ளோரும் அடையாள எண் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.