/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாரம்பரிய கறுப்புகவுனிக்கு மவுசு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்
/
பாரம்பரிய கறுப்புகவுனிக்கு மவுசு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்
பாரம்பரிய கறுப்புகவுனிக்கு மவுசு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்
பாரம்பரிய கறுப்புகவுனிக்கு மவுசு வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 15, 2024 12:03 AM

பொன்னேரி: மீஞ்சூர் வட்டாரத்தில் சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் பாபட்லா, பொன்னி, சீரகசம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டு உள்ளனர்.
ஒரு சில விவசாயிகள் பாரம்பரிய நெல் வகையாகன 'கறுப்புகவுனி' ரகத்தை பயிட்டு வளர்த்து வருகின்றனர். இவற்றின் பயிர்காலம், 140 நாட்களாகும்.
இந்த ரகம் மருத்துவ குணங்களை கொண்டதாக இருப்பதால், இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி தெரிவித்ததாவது:தற்போது மக்களிடம் பாரம்பரிய நெல் ரகங்கள், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து நல்ல புரிதல் இருக்கிறது. அவற்றை தேடி சென்று வாங்க துவங்கி உள்ளனர்.
இதில் அதிக மருத்துவ குணம் கொண்டதாக கறுப்புகவுனி ரகம் இருப்பதால், இதற்கு மவுசு அதிகமாக உள்ளது. இதை பயிரிடுவதால், மற்ற நெல் ரகங்களை காட்டிலும் மகசூல் குறைவாகவே இருக்கும். அதே சமயம் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
அங்காடிகளில் கறுப்புகவுனி அரிசி, கிலோ 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எதிர்பார்த்த வருவாய் கிடைப்பதால், இதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.