/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அறுவடைக்கு தயாரான பச்சைப்பயறு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
/
அறுவடைக்கு தயாரான பச்சைப்பயறு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
அறுவடைக்கு தயாரான பச்சைப்பயறு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
அறுவடைக்கு தயாரான பச்சைப்பயறு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஏப் 13, 2025 02:19 AM

பொன்னேரி:பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், கோடைக்காலங்களில் பச்சைப்பயறு பயிரிடப்படுகிறது. குறைந்த செலவில், ஓரளவிற்கு வருவாய் தரும் பயிராக இருப்பதால், விவசாயிகள் இதை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அறுவடையின்போது, பச்சைப்பயறு செடிகளை அறுத்து, களங்களில் உலர வைத்து, பின் அதிலுள்ள பருப்புகள் தனியாக பிரிக்கப்படுகிறது.
பச்சசைப்பயறு அறுவடை பணிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 15 - 20 பணியாட்கள் தேவைபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பச்சைப்பயறு அறுவடை காலங்களில், ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால், பச்சைப்பயறு பயிரிடுவதில் விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்தது. கடந்தாண்டு, 12,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட நிலையில், இந்தாண்டு, 4,500 ஏக்கராக சரிந்துள்ளது. தற்போது, அறுவடைக்கு தயாரான நிலையில், ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
ஒரு சில விவசாயிகள், பச்சைப்பயறு செடிகள் மீது களையை அழிப்பதற்காக மருந்துகளை தெளித்து, செயற்கையாக உலர வைத்து, பின் இயந்திரம் உதவியுடன் அறுவடை செய்கின்றனர். இந்த வழிமுறை சுகாதாரத்திற்கு உகந்தது அல்ல. வேளாண்மை துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
மேலும், அறுவடை பணிகளுக்கு தேவையான பணியாட்கள் கிடைப்பதற்கு உதவும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
அறுவடை காலத்தில் பணியாட்கள் கிடைக்காத நிலையில், வேறுவழியின்றி ஒரு சில விவசாயிகள் தான், இதுபோன்று செயற்கையாக உலர வைத்து அறுவடை செய்கின்றனர். நுாறு நாள் பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள அரசு நடவடிக்கை எடுத்தால், இப்பிரச்சனைக்கு எளிதாக தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.