/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை சீரமைக்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
/
சாலையை சீரமைக்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 06, 2025 03:02 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை, உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தில் இருந்து, சித்துார்நத்தம் வரையிலான ஒன்றிய சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது.
பலமுறை கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்திற்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று கிராம மக்களுடன் இணைந்து சாலையில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தினர், 'உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர்.
அதை தொடர்ந்து, நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டு, ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சிய போக்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பின் கலைந்து சென்றனர்.

