/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே சுரங்கப்பாதை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
/
ரயில்வே சுரங்கப்பாதை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
ரயில்வே சுரங்கப்பாதை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
ரயில்வே சுரங்கப்பாதை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
ADDED : நவ 06, 2025 03:05 AM

பொன்னேரி: ரயில்வே சுரங்கப்பாதையில் பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.
பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் உள்ள திருவாயற்பாடி பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது.
இந்த வழியாக மெதுார், கோளூர், பெரும்பேடு உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், பொன்னேரிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுரங்கப்பாதை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
அவ்வப்போது சுரங்கப் பாதை சேதமடைவதும், நெடுஞ்சாலைத் துறையினர், 'பேட்ச் ஒர்க்' செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
அவ்வாறு, 'பேட்ச் ஒர்க்' பணிகளை மேற்கொள்ளும் போது, முழுதுமாக பெயர்த்து எடுத்துவிட்டு சீரமைப்பதில்லை. கண் துடைப்பிற்காக தார் மற்றும் ஜல்லிக் கற்கள் கலவையை கொட்டிவிட்டு செல் கின்றனர்.
இதனால், சுரங்கப்பாதை மேடு, பள்ளமாக மாறிவிடுகிறது. இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்களின் மேற்பகுதி, சுரங்கப்பாதையின் கான்கிரீட் கட்டுமானங்களில் சிக்கிக் கொள்கிறது.
இரண்டு மாதங்களில், மூன்று கனரக வாகனங்கள் சிக்கி, கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே, நெடுஞ் சாலைத் துறையினர், சுரங்கப்பாதையை முழுமையாக பெயர்த்து எடுத்துவிட்டு, கனரக வாகனங்களும் பயணிக்கும் வகையில், தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

