/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வீடுதோறும் விண்ணப்பம் வினியோகம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வீடுதோறும் விண்ணப்பம் வினியோகம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வீடுதோறும் விண்ணப்பம் வினியோகம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வீடுதோறும் விண்ணப்பம் வினியோகம்
ADDED : நவ 06, 2025 03:07 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய வீடு, வீடாக விண்ணப்பம் வினியோகிக்கும் பணி துவங்கியது.
தேர்தல் ஆணையம் உத்தர வின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி, கடந்த 4ம் தேதி துவங்கி, டிச., 4 வரை நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்பம் வழங்கப்பட்டது.
அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு சென்று, விண்ணப்பம் வினியோகிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
திருவள்ளுர் வட்டம் காக்களுர் ஊராட்சி, ஆவடி வட்டம் திருநின்றவூர் பகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விண்ணப்ப வினியோக பணியை, மாவட்ட தேர்தல் அலுவல ரும், கலெக்டருமான பிரதாப் பார்வையிட்டார்.
பின், காக்களுர் அரசு தொடக்க பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தையும் ஆய்வு செய்தார்.
அதன்பின், கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில், 35.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
டிச., 4 வரை, ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள், வீடுகளுக்கு சென்று, விண்ணப்பத்தை வழங்கி, மீண்டும் அதை பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணி முடிந்ததும், டிச., 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும். அவற்றில் திருத்தம் செய்த பின், பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

