/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்பு மானியங்கள் வழங்கணும் விவசாயிகள் தீர்மானம்

ADDED : நவ 22, 2025 02:06 AM
திருத்தணி: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநாடு, மாநில பொருளாளர் பெருமாள் தலைமையில், நேற்று திருத்தணியில் நடந்தது. இந்த கூட்டத்தில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த வேண்டும். கரும்புக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை, 170 கோடி ரூபாயில் நவீனப்படுத்த வேண்டும். எத்தனால் மற்றும் இணை மின் உற்பத்தி செய்யும் வகையில், ஆலையை தரம் உயர்த்த வேண்டும். 1 டன் கரும்புக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும்.
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் மனித உயிர் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். விவசாயிகள் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.
எனவே, சாகுபடி பரப்பை அதிகரிக்க, விவசாயிகளுக்கு சிறப்பு மானிய தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட, 13 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.