/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
/
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : நவ 22, 2025 02:05 AM
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சிகளிலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது.
நேற்று, திருமணிக்குப்பம் ஊராட்சியில் நடந்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு, வட்டார வள அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
இதில், 2025 - 26ம் ஆண்டு ஊராட்சி பகுதியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, நுாறு நாள் திட்ட தொழிலாளர்களிடம் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, 2024 - 25ம் ஆண்டு, 100 நாள் திட்டத்தின் வரவு - செலவு குறித்து, கடந்த 17 - 20ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, மதிப்பீட்டு அறிக்கை மற்றும் வருடாந்திர செயல் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

