/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
நெற்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஏப் 11, 2025 02:08 AM

திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியில் 500 ஏக்கருக்கு மேல், விவசாயம் செய்யப்படுகிறது. நெல், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்கின்றனர்.
அறுவடை செய்த பயிர்களை உலர்த்தி பிரித்தெடுப்பதற்க்கு ஏற்ற நெற்களம் அப்பகுதியில் இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன் தாங்கல் ஏரி அருகே அமைக்கப்பட்ட நெற்களம், மண் பரப்பினுள் துார்ந்துள்ளது. வேறு நெற்களம் இல்லாத காரணத்தால், அதன் மீதே தானியங்களை உலர வைக்கின்றனர். பெரும்பாலானோர் சாலைகளிலும், தார்பாய் அமைத்தும் உலர வைக்கின்றனர்.
பல விவசாயிகள் நெல்லை பாதுகாத்து வைக்க இடமில்லாததால் தனியாருக்கு குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே, விவசாயிகளின் வசதிக்காக, இப்பகுதியில் புதிய நெற்களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.