/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : மே 03, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு குறுவட்டத்திற்கு உட்பட்ட 30 கிராமங்களில், பூ, தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, உட்பட பல்வேறு காய்கறிகள் 2,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விளைவிக்கும் பொருளை தாங்களே விற்பனை செய்யும் வகையில், 30 கிராமங்களில் இருந்து வந்து செல்ல போக்குவரத்து வசதி உள்ள கனகம்மாசத்திரம் பகுதியில், உழவர் சந்தை கூடம் ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.