/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 28, 2025 01:35 AM

பொன்னேரி:காட்டூர் நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் வரும் கால்வாயின் குறுக்கே உள்ள தடுப்பணை முள்செடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி உள்ளது.
இதை நீர்வளத்துறையினர் சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த லட்சுமிபுரத்தில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து கால்வாய் வழியாக, காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் செல்கிறது.
இக்கால்வாய், காட்டூரில் உள்ள சியோல் ஓடை வழியாக சென்று, பழவேற்காடு ஏரியில் முடிகிறது.
காட்டூர் கிராமத்தில் இக்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, பராமரிப்பு இன்றி உள்ளது.
தடுப்பணை கட்டுமானங்களை சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கட்டுமானங்கள் சேதமடையும் நிலை உள்ளது. மதகுகளில் உள்ள திருகுகள் துருப்பிடித்து உள்ளன. மண் சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.
எனவே, நீர்வளத்துறையினர் தடுப்பணை பகுதியை பார்வையிட்டு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.