/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பரிக்குப்பட்டு தடுப்பணை மோசம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
பரிக்குப்பட்டு தடுப்பணை மோசம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
பரிக்குப்பட்டு தடுப்பணை மோசம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
பரிக்குப்பட்டு தடுப்பணை மோசம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 07, 2024 02:23 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெரியகாவணம், பரிக்குப்பட்டு, உப்பளம், மடிமைகண்டிகை வழியாக வஞ்சிவாக்கம், பெரும்பேடு, ஆசானபூதுார் கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு மழைநீர் கொண்டு செல்லும் ஓடை கால்வாய் விவசாய நிலங்களுக்கு இடையே பயணிக்கிறது.
விவசாய தேவைக்காகவும், நிலத்தடி நீர் பாதுகாப்பதற்காகவும், பரிக்குப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக சிறிய தடுப்பணை கட்டப்பட்டது.
மழைக்காலங்களில் தடுப்பணை பகுதியில் தேங்கும் மழைநீர், விவசாயத்திற்கு பயன்பட்டு வந்தது. கால்வாயில் மழைநீர் தேங்குவதால், அருகே உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை மோட்டார்களும் நல்ல நிலையில் செயல்பட்டன.
இந்நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாததால், தடுப்பணை சேதம் அடைந்துள்ளது. கான்கிரீட் கற்கள் பெயர்ந்தும், ஆங்காங்கே ஓட்டைகள் ஏற்பட்டும் உள்ளன.
மழைக்காலங்களில் தடுப்பணையில் மழைநீர் தேங்காமல் உடைப்பு மற்றும் ஓட்டைகள் வழியாக வெளியேறி விடுகிறது. இதனால், தடுப்பணை உதவியுடன் கால்வாயில் மழைநீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், உடனடியாக பரிக்குப்பட்டு கிராமத்தில் சேதமடைந்து உள்ள தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.