/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 28, 2025 03:19 AM

ஆர்.கே.பேட்டை:நீர்ப்பிடிப்பு பகுதியில் சேதமான தடுப்பணையை பருவ மழைக்கு முன் சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக அமைந்துள்ளது ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமம். பாலாபுரம், மகன்காளிகாபுரம், கதனநகரம், ஆர்.ஜே.கண்டிகை உள்ளிட்ட கிராமங்களை ஒட்டி, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மலைப்பகுதி உள்ளது.
இது சிறந்த நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. இங்கிருந்து பல்வேறு ஓடைகள் வாயிலாக தமிழக எல்லைக்குள் மழைநீர் பாய்ந்து வருகிறது.
பாலாபுரத்திற்கு மேற்கில் உள்ள அம்மலேரி, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் பிரதான நீர்நிலையில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
அம்மலேரியின் உபரிநீர் கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீர், ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஏரிகளை சென்றடைகிறது. இந்த உபரிநீர் கால்வாயில் காட்டூர் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
இந்த தடுப்பணை பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கிறது.
இதனால், பாலாபுரம் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வரும் பருவமழைக்கு முன்னதாக இந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.