/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்மாற்றி, கம்பம் சேதம் அச்சத்தில் விவசாயிகள்
/
மின்மாற்றி, கம்பம் சேதம் அச்சத்தில் விவசாயிகள்
ADDED : மார் 21, 2025 11:51 PM

பொன்னேரி,
பொன்னேரி அடுத்த கல்மேடு கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை மோட்டார்களின் மின் இணைப்பிற்காக பதிக்கப்பட்டுள்ள கம்பங்கள் சாய்ந்துள்ளன.
அங்குள்ள மின்மாற்றியை தாங்கி பிடித்துள்ள கம்பங்கள் சேதமடைந்து, உள்ளிருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசினால், கம்பம் மற்றும் மின்மாற்றி உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
மின்கம்பங்கள் சாய்ந்தும், சேதமடைந்தும் இருப்பது குறித்து மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இங்குள்ள மின்மாற்றியும் சாய்ந்தும், கம்பங்கள் சேதமடைந்தும் இருப்பதால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் நேரிடும் முன், கம்பம் மற்றும் மின்மாற்றியை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.