/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு
/
விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு
ADDED : நவ 13, 2024 01:42 AM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில் விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு நடந்தது.
இதில் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாவட்ட செயலர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார்.
மாநாட்டில் சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.
கலெக்டர் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துடன் பேசி பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும், இல்லா விட்டால் டிச. 23ம் தேதி சுங்கச்சாவடி முற்றுகையிடப்படும் என முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் பெருமாள், ஜெயசந்திரன், துளசி நாராயணன் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

